
நாடு முழுவதும் ஆன்லைன் வர்த்தக முறையானது ஆண்ட்ராய்டு போன்கள் வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது otp பைபாஸ் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஓடிபி மூலமாக அதிகமான அளவில் மோசடிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கிடையில் கூகுள் மேப் மூலம் தற்போது ஒரு புதிய வகை மோசடி அரங்கேறி வருகிறது. கூகுள் மேப்பில் கடைகள், நிறுவனங்கள், ஹோட்டல்களை தேடும்போது அதன் முகவரி, ரேட்டிங், தொடர்பு எண் ஆகியவற்றை அறியும் வசதியை கூகுள் பே தன்னுடைய பயனர்களுக்கு வழங்குகிறது.
இதை தப்பாக பயன்படுத்தும் சைபர் கிரைம் கும்பல்கள், போலியான நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து ஏமாற்றுகிறார்கள். எனவே பொதுமக்கள் கூகுள் மேப்பில் ஒரு இடம் குறித்து தேடும்போது அது உண்மையான நிறுவனமா? என்பதை கவனமாக பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.