
தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக சட்டசபையில் திமுகவினர்- அதிமுகவினர் இடையே பெரும் விவாதம் நடைபெற்றுள்ளது.
ஏற்கனவே அதிமுக- பாஜக கூட்டணி குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது சட்டசபையில், கூடா நட்பு கேடாய் முடியும் என அதிமுகவினரை பார்த்து துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறியுள்ளார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், கூடா நட்பு கேடாய் முடியும் என்பது உங்கள் தலைவர் கலைஞர் சொன்னது தான் என கூறினார்.
மேலும் கடந்த 1999 ஆம் ஆண்டு திமுக- பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தபோது கூடா நட்பு எப்படி இருந்தது? என எதிர்க்கட்சி செயலாளர் எஸ்.பி. வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.