
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. ஜூலை மாதம் முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஜூலை மாதம் மின் கட்டணம் செலுத்திய பலருக்கும் இதர கட்டணம் என்ற பெயரில் தமிழக மின்வாரியம் சார்பில் கூடுதல் கட்டணம் செலுத்தும் படி எஸ் எம் எஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மின்வாரிய அலுவலர்கள், ஜூலை 15ஆம் தேதியில் மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு ஜூலை 1 முதல் இந்த கட்டணம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியிருந்தது. அதன்படி ஏற்கனவே கட்டணம் செலுத்தியோருக்கும் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை கணக்கிட்டு கூடுதல் தொகையை எஸ் எம் எஸ் அனுப்புவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.