மலையாள சினிமாவில் வெளியான பிரேமலு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் மமீதா பைஜூ. இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில் தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் நடிகை மமீதா பைஜூ சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள ஒரு கடை திறப்பு விழாவுக்கு வருகை புரிந்திருந்தார். அவரைப் பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

அப்போது நடிகை மமீதா பைஜூ காரில் இருந்து இறங்கிய போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவருடன் கைகுலுக்கவும் செல்பி எடுக்கவும் ரசிகர்கள் முயற்சி செய்த நிலையில் சிலர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவருடைய உடம்பில் பல இடங்களில் கை வைத்து அத்துமீறினர். உடனடியாக அதிக பாதுகாவலர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு மமீதா பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் அத்துமீறிய ரசிகர்களின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.