தமிழகத்தில் 6083 ஊராட்சிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் குடும்பங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலக்கூடிய வளர இளம் பெண்களுக்கு மாதவிடாய் கால சுகாதாரம் மேலாண்மை குறித்து பயிற்சி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதனைப் போலவே கூட்டுறவு பணியாளர்களின் வாரிசுகள் அரசு பள்ளிகளில் பயின்று 10, 12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றால் விருதுகள் வழங்கப்படும் எனவும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி 90 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.