
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி. 60 வயதான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் தன்னுடைய மருமகள் சத்யாவால் கூலிப்படைய ஏவி கொலை செய்யப்பட்டார். இது குறித்து நடந்த விசாரணையில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சத்யா தன்னுடைய அண்ணனின் உதவியோடு இதனை செய்ததாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சத்யா அவருடைய அண்ணன் பிரபு உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதன்படி பிரபு உள்ளிட்ட நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, சத்யாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.