சென்னையில் உள்ள செனாய் நகர் பகுதியில் ஆர்த்தி (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிஎச்டி படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் படிப்பு சம்பந்தமாக கெமிக்கல் வாங்குவதற்காக கல்லூரியிலிருந்து அடையாறுக்கு சென்றார். இவர் தன்னுடைய தோழி ரேணுகா தேவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். இவர்கள் மெரினா காமராஜர் சிலை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி ஒன்று திடீரென இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் இருவரும் நிலை தடுமாறு கீழே விழுந்த நிலையில் ரேணுகா தேவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் ஆர்த்தியின் உடை லாரியில் சிக்கியதால் ‌ அவர் சிறிது தூரம் தரதரவனெ இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு ஆர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநர் மாடசாமி என்பவரை கைது செய்துள்ளனர்.