
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். இவர்களுடைய பெற்றோர் பேக்கரி ஒன்றில் கேக் ஆர்டர் செய்து வாங்கி உள்ளனர். இதனை அடுத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து இரவு 10 மணிக்கு குடும்பத்தினர் அனைவருக்குமே உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. சிறுமி தனக்கு தாகம் எடுப்பதாகவும் வாய் வறட்சியாக இருப்பதாகவும் கூறிவிட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது .
உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். சிறுமியின் சகோதரிகள் இருவரும் கேக் சாப்பிட்டு இரவை வாந்தி எடுத்ததால் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இந்த நிலையில் சிறுமி உயிரை பறித்தது பிறந்தநாள் கேக்க? இல்ல அதில் விஷம் ஏதும் கலக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுந்த நிலையில் பேக்கரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை எடுத்து சிறுமி மகிழ்ச்சியோடு பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
10 years Patiala girl Manvi lost her life after consuming bday cake which family orders from local backery. Very sad news. pic.twitter.com/QzbOItnX07
— Raovarinder Singh Benipal (@RaovarinderSin2) March 30, 2024