1,15,000 மதிப்புள்ள லேப்டாப் ஆர்டன் செய்த நபருக்கு 15,000 மதிப்புள்ள லேப்டாப் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்பை பிரபல ஆன்லைன் நிறுவனத்திடம் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் இவருக்கு ரூபாய் 15,000 மதிப்புள்ள லேப்டாப் மட்டுமே வந்ததாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து சம்மந்தப்பட நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.