GATE-2023 மதிப்பெண் அட்டைகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்பதாரர்கள் தங்களது என்ரோல் ஐடி மற்றும் பாஸ்வேர்டு விவரங்களை உள்ளிட்டு மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முழுமையான விவரங்கள் அறிய https://app.gate.iitk.ac.in/login என்ற இணையதளத்தைப் பார்க்கவும். இந்த மதிப்பெண் அடிப்படையில் ஐஐடி மற்றும் பிற பொதுத்துறை கல்வி நிறுவனங்களில் பட்டம் மற்றும் பிஎச்டி படிப்புகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது. GATE மதிப்பெண் அட்டையை மார்ச் 22 முதல் மே 31, 2023 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.