ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை  வீழ்த்தி கொல்கத்தா கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இந்தப் போட்டி முடிவடைந்ததையடுத்து முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பலரும் சிறப்பாக விளையாடி அணி மற்றும் வீரர்களை தேர்வு செய்து தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தன்னுடைய சிறந்த அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

அவருடைய அணியில் தமிழக வீரர்களான நடராஜன், தினேஷ் கார்த்திக் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன் பிறகு அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை தேர்வு செய்துள்ள அவர் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் சுனில் நரேன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மேலும் இவருடைய அணியில் நிக்கோலஸ் பூரன், ரியான் பராக், ஆண்ட்ரே ரசல், பும்ரா, டிரெண்ட் பவுல்ட் ஆகியோர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்ததற்கான ஆரஞ்சு தொப்பி விராட் கோலிக்கும், அதிக விக்கெட்டுகள் எடுத்ததற்கான ஊதா தொப்பி ஹர்ஷல் படேலுக்கும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.