தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த். கேப்டன் என்று பலரால் அழைக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த வருடம் உடல்நல குறைவின் காரணமாக உயிரிழந்தார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. இதனை முன்னிட்டு இன்று தேமுதிக கட்சியினர் சென்னையில் அமைதி பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்தனர். இதற்காக அனுமதி கேட்டு கடந்த 5-ம் தேதி காவல்துறைக்கு கடிதம் எழுதி அனுப்பிய நிலையில் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலினிடம் தேமுதிக கட்சியினர் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு திமுக கட்சியினர் சென்னையில் அமைதி ஊர்வலம் நடத்திய நிலையில் அதற்கு மட்டும் காவல்துறையினர் அனுமதி கொடுத்த நிலையில் தற்போது கேப்டன் நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதிக கட்சியினருக்கு அமைதி ஊர்வலம் நடத்த அனுமதி கொடுக்காதது அரசியல் காழ்புணர்ச்சி என்கிறார்கள். மேலும் இந்த நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தேமுதிக கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கு பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு ஏராளமான தொண்டர்கள் ஊர்வலம் நடத்துவதற்காக கட்சி அலுவலகத்தில் குவிந்துள்ள பேரணிக்கு அனுமதி வழங்காதது அரசியல் காழ் புணர்ச்சியா அல்லது காவல்துறையின் காழ் புணர்ச்சியா என்று தெரியவில்லை தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி பேட்டியில் கூறியுள்ளார்.