நடந்து முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் பாக். கிரிக்கெட் அணியை பலரும் விமர்சித்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலமாகவே தடுமாறி வருகிறது. கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய மற்றும் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் அதற்கு பொறுப்பு ஏற்று பாபர் அசாம் தன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால் மீண்டும் அதே தொடரை முன்னிட்டு அவர் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார். இருப்பினும் பாகிஸ்தான் அணி தொடர்ந்து தடுமாறி வருவதால் பாபர் அசாம் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார். அவர் உலகம் முழுவதும் அசத்தும் விராட் கோலியை  சொந்த மண்ணில் விளையாடும் போது கூட சொதப்பி வரும் பாபர் அசாமால் நெருங்க கூட முடியாது என்று கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் ரசிகர்கள் விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசுவதை இதோடு நிறுத்தி விட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இது பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.