
டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இப்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகக்கூடிய இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள்மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் தனுஷ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதாவது, கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் என தனுஷ் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Captain Miller first look ⏳
— Dhanush (@dhanushkraja) June 25, 2023