
பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 72 குண்டுகள் முழங்க தமிழ்நாடு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை முதலே ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சில விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து முடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.