பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் க்யாரா அத்வானி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஹைதராபாதிலும் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திர  துணை முதல்வரும் நடிகர்ருமான பவன் கல்யாண் கலந்து கொண்டார். அதன் பிறகு ராம்சரண்  உட்பட பட குழுவும் கலந்து கொண்டனர். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள்  வந்திருந்த நிலையில் நிகழ்ச்சிக்கு வந்த இரு ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்தனர். அதாவது விழா முடிந்து வீடு திரும்பும் போது இரு ரசிகர்கள் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து கேள்விப்பட்ட ராம்சரண் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள் தெரிவித்தார். மேலும் இருவருக்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.