கேரளாவின் ரன்னி பகுதியில் நேற்று நடைபெற்ற ஒரு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காய்கறி கடை ஒன்றில் கேரட்டை எடுத்து கடித்த இருவரை அக்கடையில் பணிபுரியும் பெண் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அப்பெண்ணின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர், அதை கண்டு தடுக்கச் சென்ற கடை உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது போதையில் இருந்த ரவீந்திரன் மற்றும் பிரதீப் ஆகிய இருவர், காய்கறி கடையில் நுழைந்து கேரட்டை எடுத்து கடித்துள்ளனர். இதை கண்டித்த கடை பணிப்பெண் மகாலட்சுமி மீது இருவரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற கடை உரிமையாளர் அனில் குமார் மீது தாக்குதல் நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாக்குதலில் காயமடைந்த பணிப்பெண் மகாலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரவீந்திரன் மற்றும் பிரதீப் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். ஒரு சிறிய தகராறு ஒரு உயிரை பறித்துள்ளது என்பது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.