
பிரதமர் மோடி திங்கள்கிழமை முதல் 2 நாட்கள் கேரளா செல்கிறார். மறுநாள் திருவனந்தபுரம் சென்று அங்கு வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர் கே. சுரேந்திரனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில் கேரளா வரும் பிரதமர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என குறிப்பிட்டிருந்தது.
உளவுத்துறை ஏடிஜிபியிடம் கடிதம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், கேரளா முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.