கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் படகு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்  22 பேர் பரிதாபமாக பலியாகினர்.  இதற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள். அந்தவகையில் இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நிதியில் இருந்து 2 லட்சம் நிதியுதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

20 பேர் பயணிக்க வேண்டிய சுற்றுலா கப்பலில் 40 பேர் சென்றதால் படகு நீரில் கவிழ்ந்தது. சம்பவத்துக்கு பிறகு தலைமறைவாக இருந்த படகு உரிமையாளரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், கோழிக்கோட்டில் வைத்து உரிமையாளர் நாசர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.