நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. கேரளாவில் முதல் முறையாக தற்போது பாஜக கணக்கை திறக்க இருக்கிறது. அதாவது பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். மேலும் இதேபோன்று பாஜக வேட்பாளர் சந்திரசேகரும் அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூரை விட 10,000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.