
மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒட்டுமொத்த திரையுல உலகமும் ஆட்டம் கண்டுள்ளது. இந்த பாலியல் புகார்களால் பல நடிகர்கள் சிக்கி வருகிறார்கள். இதனையடுத்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகை ராதிகா மலையாள சினிமாவில் கேரவவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை நடிகர்கள் உட்பட படகுழுவினர் அனைவரும் செல்போனில் பார்ப்பார்கள் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது கேரளாவை விட தமிழ் சினிமாவில் தான் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக மீண்டும் பரபரப்பு குற்றசாட்டினை முன்வைத்துள்ளார். அதன்பிறகு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுபவர்களின் பெயர்களை எல்லாம் கேட்டாலே நீங்கள் பயந்து விடுவீர்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அதில் பாதி பக்கங்களை காணும். சுமார் 36 பக்கங்களா அல்லது இதைவிட அதிகமா என்பது சரிவர தெரியவில்லை. இப்படி பாதி பக்கங்கள் காணாமல் போனதால் கேஸ் வீக்காக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நடிகை ராதிகா பாலியல் புகார் குறித்து அடுத்தடுத்து கருத்து தெரிவித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.