பிரபல நடிகை சனம் செட்டி இன்றைய உலகில் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அடிக்கடி காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் 4 வழக்குகள் பாலியல் வன்கொடுமை கீழ் பதிவானது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து கிருஷ்ணகிரி, பெங்களூரு மற்றும் மராட்டிய மாநிலம் தானேவில் பள்ளி குழந்தைகளுக்கு நடந்த கொடூர சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றும், இதற்காக அனுமதி கேட்டு காவல் ஆணையரை சந்திக்க வந்துள்ளோம் என்று நடிகை சனம் செட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறினார். அதாவது தமிழ் திரையுலகிலும் பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டே வருகின்றது. தமிழ் திரையுலகில் நடிகைகள் சந்திக்கும் பாலியல் வன்கொடுமையை ஒழிப்பதற்காக கேரளாவில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை போல தமிழகத்திலும் வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதோடு பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் படம் கிடைக்கும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதற்காக பெண்கள் உடன்படாமல் தைரியமாக அதனை எதிர்த்து செயல்படுங்கள் என்றும், உங்களுக்கு திறமை இருந்தால் வாய்ப்பு உங்களைத் தேடி வரும் என்றும் கூறினார். மேலும் அவர் கேரளாவை போன்று தமிழ் திரையுலகிலும் இதற்கான விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.