அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது ஒரு அரிய, மத்திய நரம்பு மண்டலத்தில்  ஆபத்தான நோய்த்தொற்று ஆகும், இது Naegleria fowleri , ஒரு வகை அமீபாவால் ஏற்படுகிறது. மக்கள் அசுத்தமான சூடான, புதிய நீரில் நீந்தும்போது அமீபாக்கள் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையலாம். இந்த அரிய வகை நோய் தற்போது கேரளாவில் பரவி வருகிறது. இரண்டு மாதங்களுக்குள் மூன்று குழந்தைகளுக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களில்  இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது தீவிர பிரச்சனையாக மாறி இருக்கிறது. 12 வயது சிறுவன் ஒருவர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். முன்னதாக மலப்புரத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து ஜூன் 16ஆம் தேதி கண்ணூரில் 13 வயது சிறுமி இறந்தார். ஐந்து வயது சிறுமி மலப்புரத்தில் உள்ள கடலுண்டி ஆற்றிலும் மற்ற இரண்டு குழந்தைகளும் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள ஆற்றில் குளித்த பிறகு இந்த நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.