டெல்லியில் பாவனா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் தனக்கு நேர்ந்த ஒரு அவலம் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது பாவனா சிவாஜி நகர் மார்க்கெட் பகுதியில் சம்பவ நாளில் இரவு 9 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மது போதையில் இருந்த ஒருவர் பாவனாவை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் அந்த பெண்ணை தகாத இடங்களில் தொட்ட நிலையில் அதிர்ச்சி அடைந்த அவர் அதனை வீடியோவாக பதிவு செய்து instagram-ல் வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்த நிலையில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் அவர் சிறை செல்வதை நினைத்து பயப்படவில்லை என்று பாவனா கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்த நபர் கையில் சிகரெட் பிடித்துக் கொண்டே கண்ணடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் எதற்காக இதுபோன்ற ஆடைகளை அணிகிறீர்கள் என்று அந்த பெண்ணை விமர்சிக்கிறார்கள்.

இது தனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாவனா கூறியுள்ள நிலையில் எப்போதுமே  பாதிக்கப்பட்டவர்களை மட்டும் தான் குற்றவாளிகளாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்றும் நான் எனக்கு பொருத்தமான உடையை அணிந்து வெளியே சென்றேன் எனவும் அந்த சமயத்தில் மேக்கப் கூட போடவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் இன்ஸ்டாகிராமில் தான் வெளியிட்ட வீடியோவால் தனக்கு மிகுந்த மன பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக கருத்துகள் வருவதாக அவர் கூறியுள்ளார்.