மேகலாய மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் தாதெங்க்ரெ என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஒரு பெண்ணை ஆண்கள் கட்டையால் கொடூரமாக தாக்குகிறார்கள். இதனை சுற்றி நின்று பலர் வேடிக்கை பார்த்ததோடு அதை வீடியோவாக செல்போனில் எடுத்துக் கொண்டிருந்தனர்.

இருப்பினும் அந்த சம்பவத்தை தடுக்க யாரும் முயற்சி செய்யவில்லை. அதாவது திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக கூறி அந்த பெண்ணை கட்டையால் அடித்து தாக்கி துன்புறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை கேட்டு காவல்துறையினருக்கு மேகாலயா சட்டமன்ற குழுவின் தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.