தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். இவர் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு கை கால்கள் செயல் இழந்துவிட்டது. அவர் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் தனக்கு உதவிகள் தேவைப்படுவதாகவும் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு ரூ.2 லட்சமும், பிரபல விஜய் டிவி நடிகர்  கேபிஒய் பாலா அவருக்கு ரூ.1 லட்சம் பண உதவியும் செய்திருந்தனர். அதன் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.25,000 பண உதவி செய்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் வடிவேலு அவருக்கு ரூ.1 லட்சம் பண உதவி செய்ததோடு அவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் நடிகர் வடிவேலு தன்னுடன் நடித்த சக நடிகர்களுக்கு உதவி செய்ய மாட்டார் என்ற அடிக்கடி தகவல்கள் பரவும் நிலையில் தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் பண உதவி செய்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.