
கரூர் மாவட்டம் குளித்தலை சாய்பாபா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவர் பஜனை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் தாலிசங்களி யில் கோர்த்து வைக்கக்கூடிய தங்க காசுகள் என்னிடம் உள்ளது. குறைந்த விலைக்கு அதனை வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறினார். ஆனால் அந்த தங்க காசுகள் மீது ஆனந்துக்கு சந்தேகம் வந்தது. இதனால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த பூங்கொடி என்பது தெரியவந்தது. மேலும் அவர்வைத்திருந்தது போலியான தங்க காசு என்பதும் உறுதியானது. இதனால் போலீசார் பூங்கொடியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்ததாக போலி தங்க காசுகளை பறிமுதல் செய்தனர்.