
சமூக வலைதளத்தில் ஏராளமான காணொளிகள் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை பெறும். அவ்வாறு ஒரு காணொளியில் தந்தை ஒருவரின் பொறுப்பற்ற செயலை அப்பட்டமாக காட்டியுள்ளது இந்த காணொளியை பார்த்த நெட்டிசன்கள் அந்த தந்தையை வறுத்து எடுத்து வருகின்றனர். காரணம் தனது இரண்டு மகன்களை அந்த தந்தை புகைப்படம் எடுப்பதற்காக அமைதியாக அமர்ந்திருக்கும் சிங்கம் ஒன்றின் முதுகில் அமர வைக்கிறார்.
முதலில் முதல் மகனை அமர வைக்க சிங்கம் அமைதியாக இருக்கிறது. பின்னர் தனது இரண்டாவது மகனையும் அமர வைக்கிறார் அப்போதும் சிங்கம் அமைதியாக இருக்கிறது. அந்த தந்தையும் சிறுவர்களுடன் சேர்ந்து சிங்கத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அந்த சமயத்தில் அவர் சிங்கத்தின் தலையின் மீது கை வைக்க முயல பொறுமை இழந்த சிங்கம் திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தது.
அந்த பார்வையிலேயே தந்தை மற்றும் மகன்கள் பதறி அடித்து நகர்ந்து சென்றனர். இந்த காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் ஒரு சிங்கத்திடம் குழந்தைகளை வைத்து விளையாடலாமா என்று பலரும் அந்த தந்தையை சாடி வருகின்றனர்.
View this post on Instagram
“>