தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இது தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திகிறது. இந்த நிலையில்அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மாணவர்களே பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் 9 மற்றும் 10 வயதுடைய 2 சிறுமிகள் படித்து வருகிறார்கள். இதே ஊரில் 13 மற்றும் 16 வயதுடைய 4 சிறுவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த இரண்டு மாணவிகளுக்கும் கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அவர்கள் மாணவிகளை தனியாக அழைத்துச் சென்று தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் இது பற்றி அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இது பற்றி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பந்தப்பட்ட சிறுவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தது தெரிய வந்த நிலையில் அவர்கள் செல்போனில் தொடர்ந்து ஆபாச படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து சிறுவர்கள் நால்வரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.