
கேரள மாநிலத்தில் உள்ள சண்டேரா காவல் நிலையத்தில் சிவில் சப்ளை காவல் அதிகாரியாக திவ்யஸ்ரீ(34) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் ராஜேஷை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திவ்யஸ்ரீக்கு சபரிமலையில் பணி ஒதுக்கப்பட்டிருந்ததால் பள்ளியேறி பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்று அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த ராஜேஷ் அரிவாளால் திவ்யஸ்ரீயை சரமாரியாக வெட்டியுள்ளார். அதனை தடுக்க முயன்ற திவ்ய ஸ்ரீயின் தந்தை வாசுவையும் அவர் சரமாரியாக வெட்டியுள்ளார்.
உயிர் பிழைப்பதற்காக வெளியே ஓடிவந்த திவ்யஸ்ரீ ராஜேஷ் விரட்டி விரட்டி வெட்டி உள்ளார். இதற்கு இடையே அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேஷை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி செல்ல ஒரு குளத்திற்குள் குதிக்க முயன்றார். இருப்பினும் போலீசார் விடாமல் ராஜேஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். அதன்பிறகு உயிரிழந்த திவ்யஸ்ரீயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அவரது தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.