
கேரள மாநிலத்தில் உள்ள பட்டினம் திட்டா பகுதியில் 18 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் 18 வயது ஆனது. இந்த சிறுமியை கடந்த 5 வருடங்களாக அதாவது 13 வயதிலிருந்தே கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 வழக்குப்பதிவுகள் பதிவு செய்த காவல்துறையினர் 6 பேரை கைது செய்துள்ளனர். இந்த சிறுமியை உடற்பயிற்சி பயிற்சியாளர், பள்ளி தோழர்கள் என பலர் பலாத்காரம் செய்துள்ளனர்.
சமீபத்தில் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த சிறுமியை உடற்பயிற்சி வகுப்பாளர்கள், பள்ளி தோழர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் என பலர் பலாத்காரம் செய்த நிலையில் அவர் தன் தந்தையின் செல்போனில் 40க்கும் மேற்பட்டோரின் நம்பர்களை பதிவு செய்து வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த சிறுமி உளவியல் நிபுணரிடம் அழைத்துச் செல்லப்படுகின்ற நிலையில் குற்றவாளிகளையும் கைது செய்ய நடவடிக்கையை துரிதப்படுத்தி உள்ளனர்.