சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் இருக்கும் மசாஜ் சென்டரில் இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆயுதப்படை காவலரான பவுஷா என்பவர் இளம் பெண்ணை மிரட்டி பணம் பறித்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் கணவரை வெளியே அனுப்பிவிட்டு இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஏற்கனவே பவுஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முன் லாட்ஜில் நுழைந்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் சிக்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.