
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 80 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த மூதாட்டி கடந்த ஆறு மாதமாக பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று வந்தார். யாரோ ஒரு மர்ம நபர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து அவரை மோட்டார் சைக்கிளில் வனப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.