
சென்னை மாவட்டம் திரு.வி.க நகரை சேர்ந்தவர் சேகரன்(72). அவரது மனைவி ராஜேஸ்வரி(55), மகன் தினகரன்(23). சேகரன் ஓய்வு பெற்ற தலைமை காவலர். சேசகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் குடிபழக்திற்கு அடிமையான சேகரன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு தனது குடும்பத்துடன் தகறாறு செய்து வந்தார். கடந்த 7-ம் தேதி வழக்கம்போல சேகரன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது தினகரன் தனது தந்தையே கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த தினகரன் தனது தந்தையை சரமாரியாக தாக்கினர். இதனால் படுகாயமடைந்த சேகரனை ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தினகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.