கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவர் விவசாயியான ராஜேந்திரன் என்பவரின் மாட்டு கொட்டகையில் நாய்கள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் ராஜேந்திரன்  ரம்யாவிடம் மாட்டு கொட்டகைய காலி செய்யுமாறு கூறியுள்ளார்.

ஆனால் ரம்யா காலி செய்ய முடியாது என கூறிநார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது . அதனால் கோபமடைந்த ராஜேந்திரன் ரம்யாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தார். பின்பு கொலை செய்ததை ஒப்புக்கொண்டு ராஜேந்திரன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜேந்திரனை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.