திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஜனவரி 26ஆம் தேதி சுற்றுலா தலங்களை காண வாகன நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குடியரசு தின விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. இன்று  மோயர் பாயிண்ட், ஃபைன் மரச்சாலை, பில்லர் ராக் மற்றும் குணா குகைக்கு இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு இந்த சலுகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.