இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூருக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ளார். அதாவது நட்புறவை மேம்படுத்துதல், மிக முக்கிய விவகாரங்களில் கூட்டணியை திடப்படுத்துதல் மற்றும் முதலீடுகளை ஈர்த்தல் போன்ற காரணங்களுக்காக அவர் சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுதான் பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் இறங்கியவுடன் இந்தியா மற்றும் சிங்கப்பூர் நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக ஏராளமான சந்திப்புகளை மேற்கொள்ள இருக்கிறேன் என பிரதமர் மோடி நிகழ்ச்சியுடன் கூறினார். அவர் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கியவுடன் அங்கு வாழும் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். மேலும் அவரை வரவேற்பதற்காக டோல் மத்தளம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் டோல் வாசித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.