
மதுரை அருகே நடைபெற்ற ஆடி வெள்ளி விழாவின்போது ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.
ஆடி வெள்ளி விழாவில் கூழ் காய்ச்சி கொண்டிருக்கும் போது, அந்த பெரிய சமையல் பாத்திரத்தில் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முத்துக்குமார் என்ற நபர் கூழ் காய்ச்சி கொண்டிருக்கும் போது திடீரென தலை சுற்றியதால் நிலை தடுமாறி, அந்த சமையல் பாத்திரத்தில் விழுந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பெரிய பாத்திரமாக இருந்ததால் அவரை மீட்பதில் சற்று தாமதமான நிலையில், அவர் பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மீண்டும் சம்பவங்கள் நிகழாமல் இருக்க பெரிய அளவிலான நிகழ்வுகளில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Whyy?💀😭
pic.twitter.com/zbOupKXBCL— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 16, 2024