இஸ்ரேல் மீது காசா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் கமாஸ் போரினால் மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதற்ற நிலை நிலவுகிறது. இதனால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேலிடம் உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகிறது. அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் நெதகுன்யாவிடம் செல்போனில் போர் தொடர்பாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமருடன் செல்போனில் பேசியுள்ளேன். அப்போது மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை குறித்து பேசினோம். அதன் பிறகு போர் பதற்றத்தை தணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவரிடம் எடுத்துரைத்தேன். மேலும் போர் பதற்றத்தை நிறுத்துவது மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்வது போன்றவைகள் குறித்து விவாதித்தோம் என்று பதிவிட்டுள்ளார்.