
கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் கொரோனா 4ஆம் அலை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இதனிடையே தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 12,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் நேற்று 10,112 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதியான சூழ்நிலையில், இன்று 6,904 ஆக பாதிப்பு குறைந்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையானது 67,806-ல் இருந்து 65,683 ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.