உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த 1996ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏவாக இருந்த  ஜவகர் யாதவ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாஜக முன்னால் எம்எல்ஏ உதயப்பன் கர்வாரியா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அதன்பிறகு அந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் குற்றவாளியான முன்னாள் எம்எல்ஏ உதயப்பன் கர்வாரியா, கபில் முனி கர்வாரியா மற்றும் சூரஜ்பான் கர்வாரியா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில் மாநில பாஜக அரசு உதயப்பனை விடுதலை செய்ய பரிந்துரை செய்தது.

அதோடு அவருடைய நன்னடத்தையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோரும் அவரை விடுதலை செய்ய பரிந்துரை செய்தனர். இதன் காரணமாக நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர்  சிறையில் இருந்து வெளியே வந்தார்.