
இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து பல மாநிலங்களில் வெப்பம் அதிக அளவில் இருக்கிறது. இந்த வெப்பத்திற்கு காலநிலை மாற்றம்தான் முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் அதிகப்படியான வெயிலை காட்டும் விதமான சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது ஒரு பெண் சாலையில் ஆம்லெட் போடும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் ஒரு பெண் சாலையோரம் அமர்ந்து தண்ணீர் ஊற்றி முதலில் சாலையை சுத்தம் செய்கிறார். அதன் பிறகு எண்ணையை அதில் ஊற்றி நேரடியாக முட்டையை உடைத்து அதில் ஊற்றி ஆம்லெட் போடுகிறார். இந்த வீடியோவை 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோவை பார்த்த சிலர் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து வருகிறார்கள்.
View this post on Instagram