தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு முன்பாக அதை சிறப்பிக்கும் வகையில், பலரும் பல விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். ஒரு சிலர் சென்னையில் இருந்து விழுப்புரம் வரை மாநாடு நடக்கும் திடலுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு வந்தனர். இன்னும் சிலரோ ரத்ததானம் அளிப்பது உள்ளிட்ட நிகழ்வுகளில் மாநாட்டை முன்னிட்டு ஈடுபட்டனர். அந்த வகையில்,

தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை முன்னிட்டு 160 மரங்கள் சென்னை டு விழுப்புரம் செல்லும் வழியெல்லாம் நட்டு வந்துள்ளார். அது குறித்து கூறுகையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு அரசியல் மாநாடாகவும் இருக்கும், பசுமை மாநாடாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்/ அது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.