
உத்திரபிரதேச மாநிலத்தில் அங்கித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக கிரண் (30) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி அங்கித் தன்னுடைய மனைவியை மாமியார் வீட்டிற்கு பைக்கில் அழைத்து சென்றார். அப்போது பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றனர். அப்போது சாலையோரம் இருந்த கிரண் மீது எதிர்பாராத விதமாக ஒரு கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தற்போது இது தொடர்பாக பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது இந்த விபத்து தொடர்பாக அங்கித் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் அந்த பகுதியில் இருந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கித்தின் நண்பர் சச்சின் என்பவர் தான் தன் காரை கொண்டு விபத்தை ஏற்படுத்தி கிரணை கொலை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திருமணம் ஆகி தங்களுக்கு ஐந்து வருடங்களாக குழந்தைகள் இல்லாததால் தன் மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக அங்கித் கூறினார். ஆனால் இதற்கு அவருடைய மனைவியின் தங்கை மறுப்பு தெரிவித்து விட்டதால் தன் நண்பன் மூலமாக காரை ஏற்றி தன் மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் ஆசை படத்தில் பிரகாஷ்ராஜ் தன் மனைவியை கொலை செய்துவிட்டு அவருடைய தங்கையை திருமணம் செய்து கொள்ள விரும்புவார். தற்போது சினிமா பட அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.