
டெல்லியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஷாஹிம் பாபா கொலை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் இருக்கும் நிலையில் இவரை காவல்துறையினர் கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்துள்ளனர். இவருக்கு திருமணம் ஆகி 3 மனைவிகள் இருக்கும் நிலையில் இவருடைய 3-வது மனைவி சோயா கான் தன்னுடைய கணவர் ஜெயிலுக்கு போன பிறகு அவருடைய சட்ட விரோத செயல்களை தொடங்கினார். இவர் அடிக்கடி ஜெயிலுக்கு சென்று தன்னுடைய கணவரை பார்த்து வந்த நிலையில் அவர் எப்படி போதைப்பொருட்களை கடத்துவது உள்ளிட்ட யோசனைகளை வழங்கியுள்ளார்.
அதன்படி தன்னுடைய கணவரின் அடியாட்களை வைத்து தன்னுடைய பெயர் வெளியே தெரியாத அளவுக்கு இவர் போதைப்பொருட்களை கடத்தியதோடு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவர் தான் அந்த குற்றத்தை செய்தார் என்பதை நிரூபிக்க முடியாத நிலையில் அவர் போதை பொருள் கடத்தியதால் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்தார். இதை தொடர்ந்து சோயா கான் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில் விலை உயர்ந்த காரில் நட்சத்திர ஹோட்டலுக்கு செல்வது மற்றும் சமூக வலைதளங்களில் போட்டோ பதிவிடுவது என தன்னை ஒரு தொழிலதிபராக பிரகடனப்படுத்தி கொண்டார்.
இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 270 கிலோ ஹெராயின் போதை பொருட்களுடன் சோயா கான் சிக்கினார். ஒரு பெண் தாதாவாக சோயா கான் வலம் வந்த நிலையில் காவல்துறையினரிடம் தற்போது கையும் களவுமாக சிக்கினார். இவற்றின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் வரை இருக்கும் அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் சோயா கானிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் டெல்லியை கலக்கிய பெண் தாதா கைது செய்யப்பட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.