கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேஷ சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மற்றும் தேன்மொழி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் தேன்மொழி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தாய் வீடான விழுப்புரம் மாவட்டம் காணை கிராமத்திற்கு சென்று உள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கோவிந்தன் மாமியார் வீட்டுக்குச் சென்று சமாதானப்படுத்தி தன்னுடைய மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்தார். அன்று இரவு கோவிந்தன், தேன்மொழியை அசிங்கமாக திட்டி கத்தியால் வயிற்று பகுதியில் குத்தினார். இதில் காயமடைந்த தேன்மொழி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கோவிந்தனை வலை வீசி தேடி வருகிறார்கள்.