அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டு ஹூஸ்டன் நகரில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ரேடியோ கோபுரம் மீது ஹெலிகாப்டர் மோதி கட்டுப்பாட்டை இழந்து சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு குழந்தை உள்பட 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பான காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.