மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணியில் அலங்கார நினைவு வளைவை அகற்றிய போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பொக்லைன் ஆபரேட்டர் உயிரிழந்தார். வளைவு இடிந்த விபத்தில் ஒப்பந்ததாரரும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த அலங்கார வளைவு இடிக்கப்பட்டது. இந்த அசம்பாவிதம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.