
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சங்கர ராமேஸ்வரர் கோவில் மற்றும் வைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது வைகுண்டபதி பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கோவில் முன்பு கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருக்கிறது.
நேற்று கோவிலுக்குள் பாம்பு ஊர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணை வீரர்கள் நீண்ட நேரம் கெடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் பாம்பே கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.