
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் அந்த விழாவில் அக்கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களை ஒன்றிணைப்பது என்பது ஒரு சவாலான விஷயமாக இருக்கிறது. அவர்களை அரசியல் படுத்தி சமூக விஷயங்களை சிந்திக்க சொல்ல வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கையில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களை சிறப்பான முறையில் வழி நடத்திக் கொண்டு செல்கிறார். சமீபத்தில் கட்சி ஆரம்பித்த ஒரு நடிகர் மற்றவர்களைப் போல் வரலாறு மற்றும் புள்ளி விவரம் பேசிக் கொண்டிருக்க மாட்டேன் என்று கூறினார். மக்களை புரிந்து கொள்ள கண்டிப்பாக வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும். மக்களோடு அவர் நிற்காமல் கோவாவில் நடிகை திருமணத்திற்கு சென்று போஸ் கொடுத்து போட்டோ சூட் நடத்தியுள்ளார்.
அதோடு தனி விமானத்தில் நடிகையுடன் சென்று போட்டோ சூட் நடத்தியுள்ளார். இப்படி போட்டோ ஷூட் நடத்துபவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள். நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் விஷயம் பெரும் விவாத பொருளாக மாறி உள்ள நிலையில் அது தொடர்பாக அந்த நடிகர் பேசியுள்ளாரா.? அதானி விவகாரம் குறித்த கேள்வி எழுப்பினாரா.? அவர் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று விஜயின் பெயரை குறிப்பிடாமல் அவர் கூறினார். மேலும் திண்டுக்கல் ஐ லியோனி இதற்கு முன்பாகவும் விஜயை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தற்போது தனி விமானத்தில் திரிஷாவுடன் சென்றது மற்றும் கீர்த்தி சுரேஷின் திருமண விழாவில் கலந்து கொண்டது போன்றவைகள் குறித்து விளாசி உள்ள நிலையில் ஏற்கனவே பெஞ்சல் புயலின் போது விஜயின் பொதுமக்களுக்காக களத்தில் இறங்கவில்லை என்று எதிர் கட்சிகளும் விமர்சித்து வருகிறார்கள்.